“எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” 1 தெசலோனியர் 5:16-18.
அனைத்து வேளையிலும் இறைவேண்டல் செய்வது என்பது “இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.” 1 தெசலோனியர் 5:17. ஆனால் எப்படி நாம் அதைச் செய்வது? நாம் செயல் புரியும் அனைத்தின் மத்தியிலும் நமது எண்ணங்களை அவர் பக்கம் திருப்பிட, நன்றியுணர்வுள்ள செயலுடனும் அவர் பட்டில் கொண்டுள்ள முழுமையான நம்பிக்கையுடனும் நமது வாழ்வை நாம் நகர்த்துகிறோம்.
நாம் இறைவஏம்டல் கொண்டை வாழ்வை வாழ வேண்டும் என்பதே இறைவனின் ஆவல். இறைவேண்டல் என்பதை ஒரு நிகழ்வாக நினைப்பதை நிறுத்திட வேண்டும் என அவர் விரும்புகிறார். ஆனால், இறைவேண்டல் எந்பதை நம் வாழ்வின் முறையாகவும், நாம் செயல் புரியும் அனைத்தையும் அனுமதிக்கும் ஒரு உளஅளார்ந்த செயல்பாடாகவும் இருந்திட அவர் விரும்புகிறார். அவர் நாம் அவரிடம் தொடர்ந்து பேசவும் தொடர்புக் கொள்ளவும் விரும்புகிறார். அவர் தம் இதயத்தோடு இணைந்து ஒவ்வொரு நாளும் தவறாது இறை வேண்டல் செய்ய அழைக்கிறார்.
நன்றியின் செபம்
எல்லாம் வல்ல இறைவா, நீர் எப்பொழுதும் இருப்பதற்காக உமக்கு நன்றிச் செலுத்துகிறேன். நாள் முழுவதும் இறைவேண்டலில் உம்மை நான் அழைக்கலாம். நான் உம்மை தொடர்புக் கொள்ள எத்தடையையும் உருவாக்கப் போவதில்லை. இறைவேண்டலில் நான் வளர உதவும். அதுவே என் வாழ்வில் நான் கொள்ளும் பெரும் பேறாக மாறிட அருள்புரியும்.
அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.