ஆணடின்பொதுக்காலத்தின்17-ம்ஞாயிறு

மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்றார். (1 சாமுவேல் 17:37).

இதற்கு முன் அவர் இதை நிகழ்த்தினார், அவரால் அதை மீண்டும் நிகழ்த்த முடியும்

மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்என்றார். (1 சாமுவேல் 17:37).

கடந்த காலத்தில் இறைவன் நிகழ்த்திய புதுமைகளை நாம் ஆச்சரியத்துடனும் நன்றியுள்ள இதயத்துடனும் நினைவுக் கூர்ந்தால், புதியதாக நாம் சந்திக்க இருக்கும் சவால்களை நினைத்து நாம் கவலைக் கொள்ள அவசியமில்லை

தாவீது கோலியாத்தை சந்தித்த போது, இறைவனுடன் துணையுடன் அவர் கொன்ற சிங்கமும் கரடியும் நினைவுக்கு வந்தன. இறைவனின் நிகழ்த்தியதை அவர் நனைவுக் கூர்நவ்தார். ஆகவே, அவர் கோலியாத்தை எதிர்க் கொள்லப் போவதைப் பற்றி கவலைக் கொள்ள தேவையில்லை.

உங்கள் வாழ்வில் தற்பொழுது ஆழி போன்ற பெரியதொரு சூழலை எதிர்கொண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், இறைவனின் நன்மைதனத்தை நினைவுக் கூருங்கள். இதற்கு முன் அவர் நிகழ்த்திய அனைத்திற்காகவும் நன்றிக் கூறுங்கள். அவர் அதை மீண்டும் நிகழ்த்துவார் என நம்புங்கள்.

கடந்த நாட்களில் இறைவன் உங்களுக்காக நிகழ்த்திய மூன்று புதுமைகளை பட்டியலிடுங்கள். உங்கள் குழப்பங்களின் மத்தியில் இதை உற்று நோங்குங்கள். இறைவனுக்கு இயலாது என்பது ஏதுமில்லை. ஆகவே, அதனை பற்றி சிந்திக்க சிறிது நேரம் எடுத்திடுங்கள். பின்பு, இறைவனின் புதுமைகளைப் பற்றி பறைச்சாங்றுங்கள். அதன் பின்பு, உங்கள் இதயத்தை நிரப்பும் திடம் உங்களுக்கு கிடைக்கும்.

நன்றியின் செபம்

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,

கடந்த நாட்களில் நீர் ஆற்றிய புதுமைக்காக,

என் இதயம் முழுவதுமாய், நான் உமக்கு நன்றி நவில்கிறேன்.

என் வாழ்வில் நீர் மீண்டும் ஒரு முறை வல்லமையோடு செயலாற்ற போகிறீர் என இன்று, நம்பிக்கையுடன் நிற்கிறேன்

நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கு மற்றும் என்றென்றைக்கும் இருக்கப் போவதற்காக நன்றி. ஆமென்.

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials