ஆண்டின்பொதுக்காலத்தின்16-ம்ஞாயிறு

தாத்தா பாட்டியர்/மூதாதையர் தினம் - நம்பிக்கையை தாரை வார்ப்பது... “தலைமுறை தலைமுறையாய்...” (லூக்கா 1:50).

நம்பிக்கையை தாரை வார்ப்பது… “தலைமுறை தலைமுறையாய்…” (லூக்கா 1:50).

திமோத்தேயு, “அவர் என் அன்பார்ந்தபிள்ளை. ஆண்டவருடன் இணைந்து வாழும் அவர் நம்பிக்கைக்குரியவர்.” (1 கொரிந்தியர் 4:17) தூய பவுலின் குழந்தையானவர்தூய பவுலின் இரண்டாம்,  (திப 16:1-4, 17:14-15) மற்றும் மூன்றாம் (திப 20:4) கட்ட திருத்தூதப் பணியில் துணை நின்றவர்.

திமோத்தேயுவின் பாட்டி லோயிக்கும், திமோத்தேயுவின் தாய் யூனிக்கேயிக்கும் தங்களது தன்னலமற்ற மற்றும் கனிவான நம்பிக்கையை கடந்து அளித்தமையால் திருத்தூதர் பவுல் அவர்களை பாராட்டுகிறார். “வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன்.” (2 திமொத்தேயு 1:5).

இன்று, தாத்தா பாட்டியர் தினத்தில், திருத்தூதர் பவுலோடு இணைந்து, பெற்றோர்கள் தங்களது தன்னலமற்ற மற்றும் திடமான நம்பிக்கையை தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள் பேரப்பிள்லைகளுக்கும் அளிக்க தாத்தா பாட்டியர் அவர்களுக்கு துணை நிற்கும் நன்மைக்காக நாம் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.

நன்றியின் செபம்

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் தாத்தா பாட்டியருக்காக எங்களின் மனமார்ந்த நன்றியினை உமக்கு தெரிவிக்கின்றோம்.

பெற்றோர்கள் தங்களது தன்னலமற்ற மற்றும் திடமான நம்பிக்கையை தங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள் பேரப்பிள்லைகளுக்கும் அளிக்க தாத்தா பாட்டியர் அவர்களுக்கு துணை நிற்பதற்காக.

எங்கள் தாத்தா பாட்டியருக்கு ஒன்றிணைந்து வாழஉம் நீடிய ஆயுளை அளிப்பீராக.

தங்களின் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளை காணும் மகிழ்வை அவர்களுக்கு அளிப்பீராக. ஆமென்.

வீடும்; சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.” (நீதிமொழிகள் 19:14).

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials