ஆண்டின்பொதுக்காலத்தின்13-ம்ஞாயிறு

“ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:8).

இறை வேண்டல் என்பது முனஅமையான தேக்வாக இருக்க வேண்டுமே அன்றி இறுதி உல்லாசப் போக்கிடமாக ஆகக்கூடாது

ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:8).

ஒரு நாள், நான் கணத்த தலை வலியோடு எழுந்தேன். அந்த கணக்கும் தலை வலியோடு ஒரு நாள் முழுவதும் பயணித்தேன். நான் சந்தித்த அனைவரிடமும் அந்த கணக்கும் வலியைப் நான் எவ்வாறு உணர்ந்துக் கொண்டிருந்தேன் என்பது பற்றி குறைப் கூறிக் கொண்டிருந்தேன். ஆயினும் அவ்வலியை என்னிடமிருந்து அகற்ற இறைவனிடம் மன்றாடவோ கேட்கவோ நேரம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தேன்.

ஆயினும், இந்த பதிலானது நம்மில் பலருக்கும் வழக்கமான ஒன்றே.

நம்மில் பலர் நமது குறைகளைக் பிறரிடம் தெரிவிப்பதிலும் அதை தீர்ப்பதிலுமே பல மணி நேரம் எடுத்துக் கொள்கிறோமே தவிர  இறைவார்த்தைக் கூறுவதுப் போல் இதை மட்டும் செய்ய தவறுகிறோம். : நமது மகிழ்ச்சி நிறைவாக கிடைக்கும் பொருட்டு இவ்வாறு கேளுங்கள். “இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.” (யோவான் 16:24).

நன்றியுடனே, நம் ஆண்டவராகிய இயேசுக் கிறித்து, நமது அனைத்து தேவைகளையும் நமக்கு நிறைவேற்றி தருகிறார். நாம் கேட்டு பெறும் ஒரு தனிப் பெரும் பேற்றைப் கொண்டுள்ளோம். ஆகவே, நாம் எச்சூழலிலும் மன்றாடலை முன்மையாக்க் கொண்டிருக்க வேண்டும்.

நன்றியின் செபம்

ஆண்டவராகிய இயேசுக் கிறித்துவே,

நான் உமக்கு நன்றி நவில்கிறேன்.

எச்சூழலிலும், அனைத்திலும் அது எதுவாக இருந்தாலும்,

நான் நன்றியுணர்வுள்ளவனாக இருந்திட வேண்டும்.

இந்த என் நோக்கத்தை நான் அடைந்திட நீர் எநக்கு துணைப் புரிந்திட உம்மை வேண்டுகிறேன்.

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials