திருவருகைக்காலமுதலாம்ஞாயிறு

இன்று திருவருகைக் கால முதலாம் ஞாயிறு... நாம் புதிய திருவழிப்பாட்டு ஆண்டில் நுழைகிறோம். நாம் தூய மாற்கு இவ்வாறு குறுவதைச் செவிமடுக்கவுள்ளோம்... “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.” (மாற்கு 1:1).

தூய மாற்கு எழுதியபடி நற்செய்தி

1. எழுதியவர்: யோவான் மாற்கு.

                        புறவினத்து கிறித்துவர்.

                        தூய பேதுருவின் சீடர்.

                        அவரின் நற்செய்தி தூய பேதுருவின் போதனையிலிருந்து தொகுக்கப்பட்டது.

                 அவரின் நற்செய்தியில் நாம் தூய பேதுருவின் குரலை மீண்டும் செவிமடுக்கலாம்

2. கிறித்துவுக்குப் பின் 55 முதல் கிறித்துவுக்குப் பின் 65 வரை எழுதப்பட்டது.

3. பார்வையாளர்கள்: உரோமையில் உள்ள கிறித்தவர்களுகுக்காக தூய மாற்கு இதை எழுதினார். எங்கே அதிக கவுளர்கள் வழிப்படப்பட்டனரோ.அவர் தமது வாசகர்கள் இயேசு கிறித்து தான் கடவுளின் ஒரே உண்மையான மகன் என தெரியப்படுத்த விரும்பினார்.

4. கருத்து: இயேசு கடவுளின் மகன்.

மாற்கு 1:1 – தூய மாற்கு, இயேசு, கடவுளின் மகன் என தொடங்குகிறார்.

மாற்கு 15:16 – தூய மாற்கு, “அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்என்றார்.! இவ்வாறு அவர் தமது நற்செய்தியை நிறைவுச் செய்கிறார்.

5. படைப்பு

தூய மாற்கு தமது நற்செய்தியை வேகமான பாணியில், புகழ்பெற்ற நாவல் பாணியில் நகர்த்துகிறார். இந்தப் புத்தகமானது இயேசுவை வார்த்தையை அடுத்து செயல்களிலும் வெளிப்படுகிறவராக சித்தரிக்கிறார். (நோயாளர் குணமளிப்பு, தூய வல்லமைகளை வெளியேற்ரல், பாவிகளை மன்னித்தல், கடும் அலையை கடிதல் மற்றும் கடல் மேல் நடத்தல்) அவர் யார் என்பதை உறுதிப்படுத்தல். இறைவனின் மகன்.  (இறைத்தன்மை).

6. இன்று தூய மாற்குவின் நற்செய்தியை படிப்பவர்களுக்கு ஒரு செய்தி தெளிவாகிறது. யாதெனில், இயேசு கிறித்துவை நாம் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

7. தூய மாற்குவின் திருவிழா – 25.04.2015

மன்றாட்டு

வாரும் தூய ஆவியே,

தூய மாற்குவின் நற்செய்தியை நான் செவிமடுத்து வாசிக்கும் பொழுது ஆண்டவராகிய இயேசு கிறித்து,

இறைவனின் மகனோடு ஆழப்பட்டு

பசுமையான வாழ்விற்குள் நான் நுழைந்திட

என்னை வழிநடத்திட

எனக்கு நீர் தேவைப்படுகிறீர்

இப்படிக்கு

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials