கிறித்துஅரசர்பெருவிழா

“ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:11)

ஒருவரை ஒருவர் அரவணைத்திடுங்கள்

ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.”

(1 தெசலோனிக்கேயர் 5:11)

ஒருவருக்கு நீங்கள் செய்யும் நன்மையானது யாதெனில் அவர்களை அரவணைப்பதும் மற்றும் உயர்த்துவதும் ஆகும். உங்கள் அண்மையிலுள்ள உள்ளவர்களிடம் அவர்கள் யாரென்றும் அல்லது நீங்கள் அவர்களை எவ்வாறு மதிக்கிறீர்கள் என்றும் உற்சாகமளிக்கும் வகையில் தெரிவியுங்கள். அல்லது கடவுள் அவர்களை எத்துணை  அன்புச் செய்கிறார் என்றும் அவர்களை ஆசீரளிக்க விரும்புகிறார் எந்றும் தெரிவியுங்கள். ஊக்கமளிப்பது வல்லமையானது. அது மக்களை ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியாக வைத்திடும்.

இன்று நீங்கள் சந்திக்க இருக்கும் நபர்களை நினைத்திடுங்கள்.

உங்கள் வாழ்வில் அவர்கள் இருப்பதற்காக நன்றிக் கூறுங்கள். அவர்களிடம் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பேசிட இறைவனிடம் உதவி நாடுங்கள். இது நிகழ்த்தப்போகும் புதுமைக்காக அவர்கள் மட்டும் அல்ல நீங்களும் ஆச்சரியம் காணப் போகிறீர்கள்.

நன்றியின் மன்றாட்டு

இறைவா,

என் நாட்களை நான் கடந்துப் போகையில்,

மக்களை உற்சாகப்படுத்தி அவர்களை எழுப்ப நீர் வழி அமைத்திட உம்மை மன்றாடுகிறேன்.

மற்றவர்கள் வாழ்வில் புதுமைச் செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கியதற்காக உமக்கு நன்றி நவில்கிறேன்.

என் வாய்ப்புகளை இன்றே நான் பெற்றுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials