பொதுக்காலத்தின்33-ம்ஞாயிறு

தூயவர்களால் நாம் சூழப்பட்டுள்ளதை நிலைநிறுத்துவோம்

எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.

நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். (எபிரேயர் 12:1-2).

கிறித்துவ விசுவாச வாழ்வு என்பது, மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு விளையாட்டரஙாகைப் போன்று தூயவர்களின் பார்வையினால் கண்ணோக்கப்படும் ஓடும் ஒரு பந்தய வீரனைப் போன்றது. அங்கே தூயவர்கள் நம்மை உற்சாகப் படுத்த காத்திருக்கினறனர். தூயவர்களின் வாழ்வு நம்மை தூண்டுகிறது. தூயவர்களின் மன்றாட்டு நம்மை திடப்படுத்துகிறது. ஆண்டவராகிய இயேசுக் கிறித்து மேல் நம் கண்ணை பதிய வைத்து, நிறைவுப் புள்ளியை நிறைவுச் செய்ய துணைப்புரிகின்றனர். தாங்கும் மனப்பான்மையோடு நாம் இதனை நிறைவுச் செய்கிறோம்.

நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.” (2 திமொத்தேயு 4:7-8).

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவரே

நான் உமக்கு நன்றி நவில்கிறேன்.

ஏனெனில் என்னை சுழ்ந்து நிற்கும்,

தங்கள் வாழ்வினால் எனக்கு ஆதரவு அளிக்கும்,

என் வாழ்வின் பயணத்தில்

நிறைவை நான் எய்தும் பொழுது

என்னை வரவேற்க காத்திருக்கும்

உமது தூயவர்களுக்காக நன்றி நவில்கிறேன்.

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials