பொதுக்காலத்தின்32-ம்ஞாயிறு

தூயவர்களின் மன்றாடல் உடனடி பலன் அளிக்கும்.

மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.

அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.” (திருவெளிப்பாடு 8:3-4). இவர்களின் வல்லமைமிகுந்த மன்றாட்டானது வானவர்களால் நடுநிலைப்படுத்தப்பட்டு விண்ணக்கத்திற்கு ஏறெடுக்கப்பட்டு மண்ணகத்தில் உடனடி பலன் அளிக்கின்றது. “பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.

” (திருவெளிப்பாடு 8:5).

நன்றியின் மன்றாட்டு

இறைவா, “அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்” (திருவெளிப்பாடு 7:9)

உம்முடைய தூயவர்களுக்காக நான் உமக்கு நன்றி நவில்கிறேன் .

எனக்காக பரிந்துரைக்கும்,

உம்முடைய இரக்கத்தைப் பெற

நான் தேவையில் இருக்கும் பொழுது வேண்டிய அருளை கண்டடைய நன்றி

இப்படிக்கு,

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials