தூய மரியா, இறைவனின் தாயின் சந்திப்பு.
“அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.” (லூக்கா 1:39).
“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக்கா 1:43).
“உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். (லூக்கா 1:36 – 37).
இந்த நற்செய்தியை கேள்வியுற்று, மரியா எலிசபெத்தை காண விரைந்துச் செல்கிறார். அவரின் பிற்கால தாமதமான பேறுகாலத்திற்கும் திருமுழுக்கு யோவானின் பிறப்புக்காகவும் அவரோடு இருந்து உதவிப் புரிய செல்கிறார்.
“அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!43 என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக்கா 1:40-43).
எலிசபெத்தை சந்தித்த பொழுது ஆண்டவராகிய இயேசுக் கிறித்துவின் தாய் ஒவ்வொரு கிறித்துவ தலைமுறையினருக்கும் தமது சந்திப்பின் பணியை துவங்கினார். “இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.” (லூக்கா 1:48).
மரியா தமது அன்பு மகன் ஆண்டவர் இயேசு கிறித்துவை அவருடன் அழைத்து வருவார். போதிக்க, விடுவிக்க, குணமளிக்க மற்றும் நம்மை மன்னிப்பதற்கு… நாம் செயல் புரியும் அனைத்திலும் நாம் வளமை மற்றும் வெற்றிப் பெற தூய ஆவியின் கனி மற்றும் வல்லமையால் நம்மை நிரப்பிட…
ஒ இறைவனே,
இறைவனின் தாய் தூய மரியாவுக்காக
என் இதயம் முழுவதுமான நன்றியை உமக்கு அளிக்கிறேன்…
ஏனெனில், உதவி தேவைப்படும் நேரத்தில் கனிவுடன் எனக்கு உதவிட வருபவர் அவரே…
அவரின் அன்புக்குரிய மகனான ஆண்டவர் இயேசு கிறித்துவை எனக்காக உடன் அழைத்து வருபவர் அவரே…
போதிக்க, விடுவிக்க, குணமளிக்க மற்றும் நம்மை மன்னிப்பதற்கு… நாம் செயல் புரியும் அனைத்திலும் நாம் வளமை மற்றும் வெற்றிப் பெற தூய ஆவியின் கனி மற்றும் வல்லமையால் நம்மை நிரப்பிட…
“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக்கா 1:43).
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.