நமது செபமாலை அன்னையின் திருவிழா
செபமாலை, இறைவனின் வல்லமையின் ஒரு உறுதிமொழி
1571 இல் துருக்கியருக்கு எதிரான லெப்பன்டோ கடற்போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக, திருத்தந்தை 5ம் பயஸ் ‘வெற்றியின் அன்னை‘ விழாவை ஏற்படுத்தினார். அந்த வெற்றி, அன்னை மரியாவின் உதவியை வேண்டி, வத்திக்கான் புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் கூடிய கிறிஸ்தவர்கள் செபித்த தொடர் செபமாலையின் விளைவாக கிடத்ததாக நம்பப்படுகிறது.
1573 இல், திருத்தந்தை 13ம் கிரகோரி இவ்விழாவின் பெயரை ‘திருசெபமாலையின் விழா‘ என்று மாற்றினார். இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் அக்டோபர் முதல் ஞாயிறு அன்று கொண்டாடும் வகையில், 1716 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் கிளமென்ட் இதை ரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார்.
1913 இல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியா, தன்னை “செபமாலை அன்னை” என்று அறிமுகம் செய்து கொண்டார். அதே ஆண்டில் திருத்தந்தை 10 ஆம் பயஸ், ஞாயிறு திருவழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இந்த விழாவை அக்டோபர் 7 ஆம் திகதிக்கு மாற்றினார்.
1969 இல் திருத்தந்தை 6 ஆம் பால், இந்த விழாவின் பெயரை ‘செபமாலை அன்னை விழா‘ என்று மாற்றினார்.
இந்த சாட்சியத்தால் தூண்டப் பெற்று, நமது கனிவுமிக்க இறைவனின் அரியணை முன் திடமுடன் வந்து செபமாலையை மன்றாடுவோம். “எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.” (எபிரேயர் 4:16).
செபமாலை, நாம் செய்யும் அனைத்திலும் வளமையும் வெற்றியும் பெற இறைவனின் வல்லமையின் ஒரு உறுதிமொழியாகும்…
“ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.” (திருவெளிப்பாடு 19:4).
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி தந்தை அகஃத்தின் வோங்
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.