ஆசீர்பெற்றதூயகன்னிமரியாவின்பிறப்பு

நாம் ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நம்மிடம் அவர் கொண்டுள்ள நன்மையைக் குறித்து கொண்டாடுவோம். அதே போல், நாமும் ஆசீர் பெற்ற தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நமக்குள் மரியாவின் புதுமைகளைக் கொண்டாடுகிறோம்.

நாம் ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நம்மிடம் அவர் கொண்டுள்ள நன்மையைக் குறித்து கொண்டாடுவோம். அதே போல், நாமும் ஆசீர் பெற்ற தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நமக்குள் மரியாவின் புதுமைகளைக் கொண்டாடுகிறோம்

1. “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்??” (லூக்கா 1:43).

2. திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்றார். (யோவான் 2:3).

3. இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்றார். (யோவான் 2:5).

4. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்என்றார்.பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். (யோவான் 19:25 – 27).

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,

உமது அன்னை மரியாவை எமக்கும் அன்னையாக எங்களுக்கு தந்தமைக்காக எங்கள் முழு மனத்தோடு உமக்கு நன்றி நவில்கிறோம். அவர் அதீத அன்பானவர், அதீத சிந்தனைமிகுந்தவர், அதீத புரிந்துணர்வுக் கொண்டவர் மற்றும் அதீத கனிவானவர்.

அவருக்காக நாங்கள் உமக்கு நன்றி நவில்கிறோம்.

எங்கள் வாழ்வியல் வழியாக நாங்கள் அவரின் குழந்தைகள் என்பதை  வெளிப்படுத்த எங்களை வழிநடத்தும்.

ஆமென்.

இந்நாளிலே, அழகான அன்னையே,

இந்நாளிலே, எங்கள் அன்பை உமக்களிக்கிறோம்!

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials