கவலைப்பட வேண்டாம்
திருப்பாடல் 94:19: “என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.” என் மனதில் சந்தேகங்கள் நிறைந்தபோது, உமது ஆறுதல் எனக்கு புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. நான் வருத்தப்பட்டு உன் அருகில் இருந்தபோது, நீர் என்னை அமைதிப்படுத்தி என்னை உற்சாகப்படுத்தினீர்கள்.
கவலையைப் போக்கி, கடவுளை நம்புவதிலிருந்து தொடங்குங்கள். யாரும் நாள் முழுவதும் கவலைப்பட விரும்புவதில்லை. நாம் அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம். ஆனால் வாழ்க்கை நமக்குக் கொண்டுவரும் பல்வேறு அழுத்தங்களைச் சந்திக்கும்போது, சிலரே எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
அந்நாளில் அவர்கள் என்ன சந்திப்பார்கள் என்பது அவர்களுக்குகே தெரியாது. ஆனால் தெரியாததைக் கண்டு நாம் பயப்படுவதில்லை. அது ஏன்? ஏனென்றால் நம்மிடம் கடவுள் இருக்கிறார். நம் இதயத்தில் கடவுள் இருக்கிறார். நாம் சாய்வதற்கு ஏதாவது இருக்கிறது. எனவே, நாம் என்ன பிரச்சினைகளை சந்தித்தாலும், நாம் பயப்படுவதில்லை; நாம் சாய்வதற்கு ஏதாவது உள்ளது மற்றும் அதில் நாம் உருதியாக இருக்கிறோம். நாம் நம்பிக்கையற்றவர்களைப் போல் இல்லை. உதவியற்றவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பர், என்ன நடக்கும் என்று அவர்கள் தொடர்ந்து பயப்படுவர். எந்த சூல் நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை, அவர் நம்மை உயர்த்துவர், அவரே நம் இறைவன், நாம் அவர் மீது சாய்ந்து கொள்ளலாம், அவரே நமது பாறை. ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது நாம் என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்ற கொள்கைகளை கடவுள் ஏற்கனவே நமக்குச் சொல்லியிருக்கிறார். ஆகவே நாம் நம் வாழ்க்கையை ஒளியினில், அமைதியுடன் வாழ்வோம்.
திருப்பாடல் 94:20-24
சட்டத்திற்குப் புறம்பாகத் தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர் உம்மோடு ஒன்றாக இணைந்திருக்க முடியுமோ? நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க அவர்கள் இணைகின்றனர்;
மாசற்றோர்க்குக் கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர். ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்; என் கடவுள் எனக்குப் புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார். அவர்கள் இழைத்த தீங்கை அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்; அவர்கள் செய்த தீமையின் பொருட்டு அவர்களை அழிப்பார்; நம் கடவுளாம் ஆண்டவர் அவர்களை அழித்தே தீர்வார்.
இந்த வசனத்தில் கடவுள் நமக்கு ஆறுதலைத் தருகிறார். மேலும் நம் பயத்தின் போது நமக்காக போராடுகிறார் என்று உறுதியளிக்கிறது. அந்த இருள் எந்த நிலையில் இருந்தாலும், கிறிஸ்து நமக்கு ஒளியாக இருக்கிறார்.
இப்படிக்கு கிறித்துவில் உங்கள்,
அருட்சகோதரி.செசிக்கா, LSP (எளியவர்களின் சிறு அருட்சகோதரிகள்)
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.