ஆண்டின்பொதுக்காலத்தின்15-ம்ஞாயிறு

“ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்” (லூக்கா 8:2).

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்” (லூக்கா 8:2).

மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார். (யோவான் 20:18).

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும்” (லூக்கா 8:2).

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற என்பதின் பொருள் என்ன? அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தாரா? அல்லது அவரிடம் ஏதேனும் மற்ற பலவீனம் இருந்ததா? அவர் பாவ வாழ்க்கையில் மூழ்கியவராக வாழ்ந்தாதாரா? இந்த கேள்விகள் யாவற்றிக்கும் நாம் விடைக் காண முடியாது.

இயேசுவின் செயலால் மகதலா மரியா புதிய நபராக உருமாற்றம் பெற்றார். இயேசுவை சந்திக்கும் முன் அவர் துன்பகரமான பாடுகளை அனுபவித்தார். அவருக்கு வேதனையும் அழுத்தமும் தந்த கடந்த கால வாழ்க்கை, மனிதர் தர இயலாத தீர்வை, இயேசுவின் நேரடி சந்திப்பிற்கு பின், அவர் பெற்றுக் கொண்டார்.

இயேசுவின் தொடக்கக் கால பணியின் பொழுது அவரைப் பின் பற்றிய பொண்கள் குழுவிற்கு மகதலா மரியா பொறுப்பேற்றிருப்பதாக தொரிய வருகிறது.

அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும், ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.” (லூக்கா 8:1-3).

இயேசுவின் மரணம் வரையிலும், அதற்குப் பின்னும் மகதலா மரியா இயேசுவிற்கு பிரமாணிக்கமாய் இருந்தார்.

இயேசுவின் சிலுவைப் பாடுகளை உற்று நோக்கியப் பெண்களுள் இவரே முதன்மைப் பெண்ணாக நற்செய்தியில் குறிப்பிடப்படுகிறார்.பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்.” (மாற்கு 15:40). மற்ற சீடர்கள் அனைவரும் பயத்தால் ஓடிவிட்டனர். இயேசுவின் திருப்பாடுகள் வரை, அவரை சிலுவையிலிருந்து இறக்கும் வரை, மாலை நேரம் வரை, அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். (மாற்கு 15:47).

மாற்கு 16:2 நற்செய்தியின் படி, ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் அவரது உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்கள் வாங்கினர். வாரத்தின் முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் அவர்கள் கல்லறைக்குச் சென்றார்கள்.

யோவான் 20:11-18, மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இருவானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லைஎன்றார். …………. இயேசு அவரிடம், “மரியாஎன்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனிஎன்றார். இந்த எபிரேயச் சொல்லுக்குபோதகரேஎன்பது பொருள். இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்எனச் சொல்என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார். (யோவான் 20:18).

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே, நேற்றைய தினம் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னை ஒரு புதுப் படைப்பாக எழுப்புகின்றீர். பசுமையான தொடக்கம், புதிய வாழ்வுநம்பிக்கையின் புதிய பாடல் மற்றும் உம்மில் நம்பிக்கை.

நான் செயல் புரியும் அனைத்திலும் வளமையும் வெற்றியும் பெற.” (யோசுவா 1:8).  வளமயான மற்றும் நிறைவான வாழ்வு வாழ” (யோவான் 10:10).

தூய மகதலா மரியா போல் நானும் கடவுளை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை நல்வழி நடத்த என்னை வழிநடத்தும்.  கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள்!” (தி. 2:11), ன் வாழ்வில் நான் அறிவிக்க வேண்டும்.  நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய்” (உரோமையர் 6:4). “புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.” (தி.பா 95:2) புதுப் பாடல் பாட. ஆமென்.

தூய மகதலா மரியாவே, நான் ஒவ்வொரு நாள் காலையையும் நான் புதியதாக தொடங்கிட எனக்கா பரிந்துரையும். “ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.” (தி.பா 98:1).

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials