ஆண்டின்பொதுக்காலத்தின்14-ம்ஞாயிறு

“எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.” (பிலிப்பியர் 4:6-7).

கவலை வேண்டாம், அனைத்திற்காகவும் செபியுங்கள்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.” (பிலிப்பியர் 4:6-7).

கவலைப்படுவது முற்றிலும் பயனற்ற ஒரு செயலாகும். உண்மையுடன் காணப் போனால், கவலைப்படுவது என்பது உண்மையிலேயே ஒரு பயனற்றதாகவே காணப்படும்.

நமது எண்ணமானது ஒரு குழப்பத்தை நோக்கி சுழன்று, பதிலைக் தேடிக் கொண்டேயிருக்கும். ஆயினும் அதற்கான பதில் இறைவனிடம் மட்டுமே உள்ளது. கவலை என்பது துன்பகரமானது.

கவலையற்றிருக்க நாம் இறைவனிடம் மன்றாடலாம். ஆயினும் கவலையற்றிருக்க நாம் நமது மனதை நமது குழப்பத்தில் வைக்கமால் வேறு ஒரு தேவையில் முன்வைக்கலாம்

கவலையை விலக்குவது நாம் நமது இறைவன் மேல் வைத்த நம்பிக்கையை முன்குறிக்கிறது.

கவலையற்றிருக்க நீங்கள் முன் வந்தால், நீங்கள் கொண்டாடவும் நன்றியுணர்வுடன் இருக்கும் ஒரு நிறைவான மனத்தன்மைக்கும் நிலைக்கும் தயாராகி விட்டிர்கள் என்பது உறுதியாகிவிடும்

இறைவன் உங்கள் குழப்பங்களை தீர்க்கும் வேளையில் நீங்கள் உங்கள் வாழ்வை மகிழ்வாய் வாழலாம்.

நீங்கள் கவலைப்படுவதை நிறுத்த உங்களுக்கு நீங்களே அனுமதியளியுங்கள்.

கவலை வேண்டாம், அனைத்திற்காகவும் செபியுங்கள்.

நன்றியின் மன்றாட்டு

ஆண்டவராகிய இயேசு கிறித்துவே,

நான் ஒரு மன நிலையுடன் இருக்கவும், என் குழப்பங்களை நோக்கமால் உம்மையே கண் நோக்கி இருந்திட எனக்கு உதவும்.

என் கவலை என் வாழ்வை ஆட்கொள்ளாமல் இருப்பதற்காக நான் உமக்கு நன்றிச் செலுத்துகிறேன்.

உம்மை தேர்ந்தெடுப்பதின் வழியாக நான் சமாதானத்தில் வாழ முடியும்.

ஆமென்.

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.” (1 பேதுரு 5:7).

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

பணி ஒய்வுப் பெற்ற அருட்பணி.அகஃத்தின் வோங்

அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.

நமது பங்கு தந்தைகளைப் பற்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials