இறைவேண்டலை தொடங்க சிறந்த வழி
“ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்;” (1 குறிப்பேடு 23:30).
நாம் எக்காரத்திற்காக இறைவேண்டால் செய்தாலும், நன்றியறிதலோடு செல்வது மிகவும் சிறப்பாகும்.
நன்றியறிதலோடு நமது இறைவேண்டலை துவங்குவது ஒரு சிறந்த பண்பாகும். இதற்கு உதாரணம் பின்வருவது… “என் வாழ்வில் நீர் நிகழ்த்திய அனைத்திற்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறித்துவே உமக்கு நன்றி… நீரே மிகவும் சிறந்தவர். நான் உம்மை மிகவும் அன்பும் மதிக்கவும் செய்கிறேன்.”
நான் உங்களை உங்கள் வாழ்வை மறுசீராய்வுச் செய்யவும், உங்கள் எண்ணத்திற்கும், சிந்தணைக்கும் மதிப்பளிக்கவும், எந்த அளவிற்கு நீங்கள் நன்றியறிதலை வெளிப்படுத்துகிறீர்கள் என்றுக் காணவும் ஊக்கப்படுத்துகிறேன்.
விடயங்களைக் குறித்து நீங்கள் முணுமுணுக்கிறீர்களா அல்லது நன்றியுணர்வுடன் உள்ளீர்களா?
நீங்கள் சவாலைக் காண வேண்டுமென்றால், ஒரு குறையைக் கூட வெளிக்கொணராமல் அந்நாளைக் கடத்துங்கள் பார்ப்போம். ஒவ்வொரு சூழலிலும் நன்றியுணர்வுடன் இருக்கும் நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உண்மையிலே, நன்றியுணர்வுள்ளவர்களாய், ஆண்டவராகிய இயேசுவுடன் ஆன்ந்த உறவுக் கொண்டவர்களாய் மேம்படுவது மட்டுமல்லாமல் அதன் வழி இதற்கு முன் இருந்திராத அளவிற்கு அவர் மாபெரும் ஆசீர் அருள்பவராய் விளங்குவார்.
நன்றியின் செபம்
ஆண்டவராகிய இயேசுவே
என் இறைவேண்டலில் என்னை வழிநடத்துவதற்காக உமக்கு நன்றிச் செலுத்துகிறேன்.
நான் எதையும் செயல்படுத்தும் முன் உம்மிடம் நன்றியுணர்வுடன் நான் வர என்னை வழிநடத்தும்..
நன்றியுணர்வு என்பது என் செப வாழ்விற்கு அடித்தளமாய் அமையட்டும்.
குறைக் கூறுவதை நான் ஒதுக்கிட இன்று தீர்மானம் கொள்கிறேன்.
ஆனால் நிலைத்த இறைவேண்டலில் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
அருட்தந்தை.அகஃத்தின் வோங் அவர்கள் பணி ஓய்வுப் பெற்று பங்கு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இவர் தற்பொழுது திருப்பலி நிறைவேற்றவும், உருவாக்கப் பயிற்சி மற்றும் விவிலியச் சிந்தனைகளையும் அளித்து வருகிறார்.
Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.